ஆன்லைன் அபராதம் முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்


ஆன்லைன் அபராதம் முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்
x

லாரிகளுக்கு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதம் முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கலெக்்டருக்கு லாரி உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்


லாரிகளுக்கு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதம் முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கலெக்்டருக்கு லாரி உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை மனு

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருவாரூர் வட்டார லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் அய்யப்பன், செயலாளர் பாண்டியன், பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் அனைத்து தாலுகா லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதங்கள் விதிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. சாலையோரம், பெட்ரோல் பங்குகள், பார்க்கில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் பதிவு எண்ணை மட்டும் குறித்துக் கொண்டு என்ன குற்றம் என்று கூறாமல் ஜெனரல் அபன்ஸ் (பொதுகுற்றம்) என்று அபராதம் விதிக்கப்படுகிறது.

மறுபரிசீலனை

இவ்வாறு அபராதம் விதிப்பதால், வாகன உரிமையாளர் வாகனத்துக்கான காலண்டர் வரி, தகுதி சான்றிதழ், பர்மிட்டுகள் பெறுவதில் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே இது போன்று ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கும் முறையை ரத்து செய்து வாகனத்தை நிறுத்தி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரி பார்த்து குற்றம் இருப்பின் அபராதம் விதிக்கும் பட்சத்தில் ஓட்டுநரின் கையொப்பத்துடன், என்ன குற்றம், ஓட்டுனர் பெயர், உரிமம் எண்ணையும், ரசீதில் குறிப்பிட வேண்டும். இதுபோன்று ஆன்லைனில் அபராத முறையை மறுபரிசீலனை செய்து முறைப்படுத்தி லாரி தொழிலை காத்து வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


Next Story