வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்


வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்
x

திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர் பாலாதெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண் அடுக்கு திட்டம்

தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்கு திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட கிராம நிர்வாக அலுவலகம், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி விவசாயிகள் ஆதார் எண், புகைப்படம், வங்கிகணக்கு எண் விவரங்கள் மற்றும் நிலஉரிமை ஆவணங்களுடன் சென்று கிரைன்ஸ். என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும.

பதிவேற்றம் செய்யும் போது நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயியின் விவரம் அடிப்படையில் கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் சேகரிக்கப்பட்டு வேளாண்மை உழவர் பேரிடர் மேலாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை. பட்டுவளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புதுறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம். விதை சான்றளிப்புத்துறை, வருவாய்த் துறை மற்றும் சர்க்கரை துறை ஆகிய துறைகளின் திட்டங்களில் பயனடைய பயன்படுத்தப்படுகிறது.

பதிவு செய்யலாம்

கிரைன்ஸ் வலைதளத்தின் மூலம் அரசின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும். இது ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் ஒரே இடத்தில் பதிவு செய்து அனைத்து துறை சார்ந்த அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம், ஒவ்வொரு முறையும் அரசின் திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விவசாயிகள் இதுவரை அரசிடம் இருந்து பெற்ற நன்மைகளை முழுமையாக இந்த வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படை விவரங்கள் மற்றும் பயிர் விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ற பயன்களை அளிக்க முடியும். மேலும், நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் பணப்பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும்.

வேளாண் அடுக்கு திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டகலைதுறை அலுவலகதுறை அலுவலகத்தை அணுகி கிரைன்ஸ் வலைதளத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதார் எண், விவவாயியின் புகைப்படம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story