இணையதளம் மூலம் விதைகள், இடுபொருட்கள் விற்பனைவிவசாயிகள் பயன்பெற அதிகாரி அறிவுரை
இணையதளம் மூலம் விதைகள், இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் விவசாயிகள் பயன்பெற அதிகாரி அறிவுரை வழங்கி உள்ளார்.
விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகள் மற்றும் இதர இடுபொருட்களை இணையதளம் மூலம் விற்பனை செய்ய கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.tnauagricart.com என்னும் இணையதளம் மூலம் விவசாயிகள் பரவலாக பயன்படுத்தும் நெல் ரகங்களின் விதைகள், உளுந்து ரகங்களின் விதைகள், பாசிப்பயறு ரகங்களின் விதைகள், மக்காச்சோள விதைகள், எண்ணெய்வித்துப்பயிர் ரகங்களின் விதைகள், பயிர் ஊக்கிகள் மற்றும் உயிரியல் இடுபொருட்கள் போன்ற வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே விவசாயிகள் உரிய கட்டணம் செலுத்தி தங்களுக்கு தேவையான இடுபொருட்களை தங்கள் வீட்டு முகவரியிலேயே பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவசாயிகள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் செய்யப்பட்டுள்ள இந்த இணையதள வசதியை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த தகவலை விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.