நாகை வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஒரு சிலர் மட்டுமே வந்தனர்


நாகை வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஒரு சிலர் மட்டுமே வந்தனர்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அதிக அளவில் புழக்கத்தில் இல்லாததால் நாகையில் உள்ள வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஒரு சிலர் மட்டுமே வந்தனர்.

நாகப்பட்டினம்

அதிக அளவில் புழக்கத்தில் இல்லாததால் நாகையில் உள்ள வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஒரு சிலர் மட்டுமே வந்தனர்.

2,000 ரூபாய் நோட்டுகள்

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19-ந்தேதி தேதி அறிவித்தது. நேற்று முதல் அனைத்து வங்கிகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது வரவு வைத்து கொள்ளலாம் என்றும், வருகிற செப்டம்பர் 30-ந்தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

நாகையை பொறுத்தவரை 10-க்கு மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இதில் பெரும்பாலான வங்கிகளில் 2.000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலர் மட்டுமே வந்தனர்

ஆனால் நாகையில் உள்ள வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஒரு சிலர் மட்டுமே வந்தனர். 2,000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இல்லாததால் தான் வங்கிகளில் கூட்டம் குறைந்த அளவு இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

முதல் நாளான நேற்று வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வந்தவர்களிடம் பான் கார்டு உள்ளிட்ட ஆதாரத்தை பெற்றுக் கொண்டு வங்கி ஊழியர்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தனர்.


Next Story