குடமுழுக்கை காண கோவிலுக்குள் குறைவான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி


குடமுழுக்கை காண கோவிலுக்குள் குறைவான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்க்கைகான குறைவான பக்தர்கள மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று குடமுழுக்கு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் வந்தனர். இந்த நிலையில் பாதுகாப்பு கருதி போலீசார் குறைவான பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் அனுமதித்தனர். மற்றவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் நேற்று நான்கு வீதிகளில் நின்று குடமுழுக்கு விழாவை காண வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கோவிலுக்குள் குறைவான பக்தர்களே குடமுழுக்கு விழாவை கண்டு களித்தனர்.


Next Story