ஊட்டி ஹில்ஸ் கிங் அணி வெற்றி
ஊட்டி ஹில்ஸ் கிங் அணி வெற்றி
நீலகிரி
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான பி மற்றும் சி டிவிஷன் லீக் கால்பந்து போட்டிகள், கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்ற சி டிவிஷன் முதல் லீக் போட்டியில் ஊட்டியை சேர்ந்த ஆர்.எம். எப்.சி. மற்றும் எப்.சி. பேந்தர் அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் ஆர்.எம். எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2-வது லீக் போட்டியில் ஊட்டி ஹில்ஸ் கிங் மற்றும் விங்ஸ் அணி ஆகியவை பங்கேற்று விளையாடின. இந்த போட்டியில் இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடியதால் போட்டி சுவாரசியமாக இருந்தது. இதில் ஹில்ஸ் கிங் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story