ஊட்டி நியூ ஸ்டார் அணி வெற்றி


ஊட்டி நியூ ஸ்டார் அணி வெற்றி
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஊட்டி நியூ ஸ்டார் அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று பி டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் ஊட்டி நியூ ஸ்டார் அணியும், கெந்தொரை அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஊட்டி நியூ ஸ்டார் அணி நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் பிரகாஷ் 62 ரன்கள், மணி 55 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து 180 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கெந்தொரை அணி 24.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 204 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. இந்த அணி வீரர்கள் ராகேஷ் 67 ரன்கள், ராஜிவ் 46 ரன்கள் எடுத்தனர். போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கெந்தொரை அணி வெற்றி பெற்றது.


Next Story