ஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி


ஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று ஏ டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் ஊட்டி கோல்ட்ஸ் அணியும், ஊட்டி ஸ்பார்டன் அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஊட்டி ஸ்பார்டன் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் ரதீஷ் 72 ரன்கள், நந்தகுமார் 97 ரன்கள் மற்றும் அருண் நாயர் 44 ரன்கள் எடுத்தனர். கோல்ட்ஸ் அணி பந்து வீச்சாளர் பிரவீன் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய ஊட்டி கோல்ட்ஸ் அணி 35 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த அணி வீரர்கள் பரத் 62 ரன்கள், அசோக், இமான் ஆகியோர் தலா 49 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி பெற்றது. 97 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அந்த அணி வீரர் நந்தகுமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.



Next Story