ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ.வுடன் சந்திப்பு


ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ.வுடன் சந்திப்பு
x

புதிதாக நியமிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திருநெல்வேலி

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு புதிய கட்சி பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் நேற்று நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் என்.சிவலிங்கமுத்து தலைமையில் பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ.வை சேரன்மாதேவி கோவிந்தபேரியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் டென்சிங் சுவாமிதாஸ், அவைத்தலைவர் பரமசிவன், இணைச்செயலாளர் செல்லசித்ரா, துணைச்செயலாளர் இசக்கியம்மாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பணகுடி லாரன்ஸ், மாவட்ட பேரவை செயலாளர் குபேந்திரா மணி, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் சாமுவேல், ஒன்றிய செயலாளர்கள் தளவை சுந்தர்ராஜ், கணபதி, கிருஷ்ணன், ஆவுடைபாலன், எம்.எம்.சாமி, நகர செயலாளர்கள் பொன்னுசாமி, பாலசுப்பிரமணியன், சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story