திறந்தவெளியில் உணவுப்பொருட்கள் விற்பனை


திறந்தவெளியில் உணவுப்பொருட்கள் விற்பனை
x

திறந்தவெளியில் உணவுப்பொருட்கள் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட டீக்கடைகள், 10-க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பஜார் பகுதியானது எந்நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். கூமாபட்டி, கான்சாபுரம், நெடுங்குளம், மகாராஜபுரம், அழகாபுரி, பேரையூர், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாக தான் செல்கின்றன. இந்தநிலையில் இங்குள்ள கடைகளில் உணவுப்பொருட்கள் திறந்த வெளியில் வைத்து விற்கப்படுகிறது. ஆதலால் நோய் எதுவும் பரவிவிடுமோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே திறந்த வெளியில் வைத்து உணவுப்பொருட்கள் விற்பவர்கள் பாதுகாப்பான முறையில் வைத்து விற்கவும், பாதுகாப்பற்ற முறையில் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story