தர்மபுரி திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் போலீசார் விசாரணை
தர்மபுரி திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் போலீசார் விசாரணை
தர்மபுரி
நல்லம்பள்ளி:
தர்மபுரி கலெக்டர் பங்களா பின்புறம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திறந்தவெளி நெல் மூட்டை சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் நேற்று காலை மர்மநபர்கள் நெல் மூட்டைகளுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தீயில் கருகி சேதம் அடைந்தன. தகவல் அறிந்து சென்ற தர்மபுரி தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் 50-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை போலீசார் நெல் மூட்டைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story