படத்திறப்பு நிகழ்ச்சி
கீழையூர் அருகே படத்திறப்பு நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி:
கீழையூர் ஒன்றியம் களத்திடல் கரையை சேர்ந்த கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மத்திய மண்டல செயலாளர் ஜோசப்ஸ்டாலின் மனைவி மரிய பபியோலா (ஆசிரியை) கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி களத்திடல்கரை இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடந்தது. தஞ்சை பரிபாலகர் சகாயராஜ் திருப்பலி நிறைவேற்றி உருவ படத்தை திறந்துவைத்தார். இதில் பேராலய அதிபர் இருதயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட்தன்ராஜ், கருங்கண்ணி பங்கு தந்தை டேவிட்செல்வகுமார், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க கீழையூர் ஒன்றிய செயலாளர் பயஸ்வில்சன், கோகூர் பங்குதந்தை தேவசகாயம், கலங்கரை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story