கழுகுமலை அருகே 8 கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு
கழுகுமலை அருகே கரடிகுளத்தில் 8 கண்காணிப்பு கேமராக்கள் திறக்கப்பட்டன.
கழுகுமலை:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தில் 'மாற்றத்தை தேடி! போதையில்லா பாதை! பள்ளிக்கு திரும்புவோம்!' உள்ளிட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமை தாங்கி, அப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள 8 கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார். அப்போது அவர் இளைஞர்களிடையே உள்ள போதைப்பழக்கம் குறித்தும், அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி கூறினார். மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்று படித்தால்தான் வாழ்க்கையில் உயர முடியும். எனவே நன்கு படித்து முன்னேற வேண்டும் என்றும், கிராம பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் தெரிந்தால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு கழுகுமலை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.