ஊசிமலை காட்சி முனையில் டீக்கடை திறப்பு


ஊசிமலை காட்சி முனையில் டீக்கடை திறப்பு
x

வனத்துறை சார்பில் ஊசிமலை காட்சி முனையில் டீக்கடை திறக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஊசிமலை காட்சிமுனை உள்ளது. இங்கிருந்து கூடலூர், முதுமலை பள்ளத்தாக்கு, தவளமலை காட்சிமுனை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் காண முடியும். இதன் காரணமாக ஊட்டிக்கு வரும் கர்நாடகா, கேரளா மாநில சுற்றுலா பயணிகள் இந்த காட்சி முனைக்கு வந்து செல்கின்றனர். அங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. இதனால் வனத்துறை மூலம் வளர்ச்சி பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நேற்று புதிதாக டீக்கடை திறக்கப்பட்டது. கூடலூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் ஈஸ்வரன் டீக்கடையை திறந்து வைத்தார். வனச்சரகர் ராஜேந்திரன் மற்றும் வனத்துறையினர், பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க, சூழல் சுற்றுலா கமிட்டி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமைத்த கழிப்பிடங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி வந்தன. தற்போது யானைகள் சேதப்படுத்த முடியாத வகையில் இரும்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. புதிதாக திறந்த டீக்கடை சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்றனர்.


Next Story