வேப்பனப்பள்ளி அருகே குடிநீர் சுத்திகரிப்பு மையம், அங்கன்வாடி மையங்கள் திறப்பு செல்லகுமார் எம்.பி. பங்கேற்பு
வேப்பனப்பள்ளி அருகே குடிநீர் சுத்திகரிப்பு மையம், அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழாவில் செல்லகுமார் எம்.பி. பங்கேற்றார்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே நாச்சிக்குப்பம் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம், கடவரப்பள்ளி, நந்தகொண்டப்பள்ளி ஆகிய கிராமங்களில் அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. இதில் செல்லகுமார் எம்.பி. கலந்து கொண்டு ரூ.27 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு மையம், அங்கன்வாடி கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா நாகராஜ், தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செல்லகுமார் எம்.பி. பேசுகையில், கர்நாடகாவில் தற்போது புதிதாக செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டத்தை ஓசூர் வரை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினேன். தற்போது கர்நாடக அரசு ஓசூர் வரையிலான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்தால் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் விரைவாக தொடங்கப்படும் என தெரிவித்தார்.