அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ முன் கவனிப்பு வார்டு திறப்பு


அரசு ஆஸ்பத்திரியில்  பிரசவ முன் கவனிப்பு வார்டு திறப்பு
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி தலைமை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ முன் கவனிப்பு வார்டு திறக்கப்பட்டது.

தென்காசி

தென்காசி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் தினமும் 10 முதல் 15 பிரசவங்கள் ஆகிறது. பிரசவத்திற்காக தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்து கர்ப்பிணிகள் இங்கு வருவதால், பிரசவ முன் கவனிப்பு படுக்கைகள் தட்டுப்பாடு இருந்து வந்தது. தற்போது அதனை சீர் செய்ய மாவட்ட கலெக்டர் அறிவுரைப்படி, தென்காசி மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா மற்றும் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் ஆகியோரின் ஏற்பாட்டில் 20 படுக்கைகள் கொண்ட வார்டு தயார் செய்யப்பட்டது.

நேற்று காலை இணை இயக்குனர் பிரேமலதா இந்த வார்டினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். மகப்பேறு துறை தலைவர் டாக்டர் புனிதவதி மற்றும் டாக்டர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள் , பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உறைவிட மருத்துவர் எஸ்.எஸ்.ராஜேஷ் நன்றி கூறினார்.



Next Story