பாம்பாறு அணை திறப்பு
பாம்பாறு அணை திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை:-
ஊத்தங்கரையை அடுத்துள்ள பாம்பாறு அணையின் தண்ணீரை நம்பி மூன்றம்பட்டி, பாவக்கல் கொண்டம்பட்டி, நடுப்பட்டி, நாய்க்கனூர், அத்திப்பாடி, கொண்டம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, நடுப்பட்டி, பாவக்கல் போன்ற ஊராட்சிகளும், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இந்த பாசன வசதியை நம்பியுள்ளன. இந்த அணை கடந்த 8 மாதமாக நிரம்பி காட்சி அளிக்கிறது. தற்போது அணைக்கு வினாடிக்கு 1,250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பாம்பாறு அணைப்பகுதி ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே யாரும் ஆற்றில் குளிக்க இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை செய்துள்ளனர்.
Related Tags :
Next Story