மீன்ஏலக்கூடம், நேர்க்கல் திறப்பு
பெரியதாழையில் மீன்ஏலக்கூடம், நேர்க்கல் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி
சாத்தான்குளம்:
பெரியதாழையில் மீன்வளத்துறை சார்பில் 6 மீன் ஏலக்கூடம், 1000 மீட்டர் கான்கீரிட் சாலை, 50 மீட்டர் நேர்க்கல் ஆகியவை ரூ.9 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. இவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கானொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையொட்டி பெரியதாழையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு மீன்வலை கூடம் உள்ளிட்டவற்றின் திறப்புவிழா கல்வெட்டுகளை திறந்தார். இதில் மீன்வளத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவி பொறியாளர் தயாநிதி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, பெரியதாழை ஊர்நலக்கமிட்டித் தலைவர்கள் டயன்ஸ், லியோ, ரமேஷ், மாவட்ட பிரதிநிதி சந்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story