தன்வந்திரி பீடத்தில் சொர்க்க வாசல் திறப்பு


தன்வந்திரி பீடத்தில் சொர்க்க வாசல் திறப்பு
x

வாலாஜா தன்வந்திரி பீடத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வாலாஜாவை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் முரளிதர சுவாமிகளின் தலைமையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. முன்னதாக மங்கள வாத்தியத்துடன் கோ பூஜை உள்பட மூலவர் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலி்த்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து தன்வந்திரி பீட வளாகத்திற்குள் உற்சவர் தன்வந்திரி பகவான் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வளாகத்தில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பிரசாதமும், பீடாதிபதி முரளிதர சுவாமியிடம் ஆசியும் பெற்று சென்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீதன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.


Next Story