சங்கராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறப்பு: மரக்கன்றுகள் நட்டுவைத்த ஐகோர்ட்டு நீதிபதிகள்


சங்கராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறப்பு:    மரக்கன்றுகள் நட்டுவைத்த ஐகோர்ட்டு நீதிபதிகள்
x

சங்கராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை ஐகோர்ட்டு நீதிபதிகள் நட்டனா்.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

சங்கராபுரத்தில் சுமார் ரூ.9 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டிடம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜா, ஆதிகேசவலு, பவானி சுப்பிரமணியன், குமரேஷ்பாபு ஆகியோர் சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து அவர்கள் கோர்ட்டு வளாகத்தில் உள்ள உணவகத்தை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கினார். மாவட்ட குற்றவியல் நீதிபதி புஷ்பாராணி, திண்டிவனம் முதலாவது கூடுதல் நீதிபதி ரகுமான், கள்ளக்குறிச்சி கூடுதல் நீதிபதி கீதாராணி, சார்பு நீதிபதி வீரன், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கராபுரம் உரிமையியல் நீதிபதி முல்லைவாணன் வரவேற்றார்.

இதில் போலீஸ் சூப்பிரண்டுகள் கள்ளக்குறிச்சி பகலவன், விழுப்புரம் ஸ்ரீநாதா, சங்கராபுரம் வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ராமசாமி, பொருளாளர் பரமசிவம், அரசு வக்கீல் பாலஅண்ணாமலை, துணை தலைவர் மகாலிங்கம், துணை செயலாளர் அன்சாரி, வக்கீல்கள் தாமரைச்செல்வன், திருநாவுக்கரசு, சரவணன், முருகன், முகமதுபாஷா, ரமேஷ்குமார், சுரேஷ்பாபு, பாண்டுரங்கன், குமரேசன், அய்யனார், சத்தியமூர்த்தி, குமார், சதாசிவம் மற்றும் வக்கீல்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story