ராணிப்பேட்டையில் காவல் பல்பொருள் அங்காடி திறப்பு


ராணிப்பேட்டையில் காவல் பல்பொருள் அங்காடி திறப்பு
x

ராணிப்பேட்டையில் காவல் பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டது. டி.ஜி.பி சைலேந்திரபாபு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், நேற்று காவலர்களின் நலனுக்காக, தமிழ்நாடு காவல் பல் பொருள் அங்காடியை, டி.ஜி.பி. சைலேந்திரபாபு காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்), முத்து கருப்பன் (இணைய வழி குற்ற பிரிவு), ஆகியோர் குத்து விளக்கேற்றி, பெயர் பலகை கல்வெட்டினை திறந்து வைத்தார்கள். முதல் விற்பனையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, ராணிப்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சதிஷ் குமார், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டார்கள்.


Next Story