பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி பாதை திறப்பு


பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி பாதை திறப்பு
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை மேலூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி பாதை திறக்கப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி மேலுார் 14-வது வார்டு பகுதியில் வெள்ளையப்பன் தெரு, பட்டங்கட்டியார் தெரு மற்றும் சுப்பையா தெரு நடுவில் அமைந்துள்ள சிமெண்டு ரோட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து தரும்படி வார்டு கவுன்சிலர் பொன்னுலிங்கத்திடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். இதனை ஏற்று அவர், செங்கோட்டை நகராட்சியிடம் முறையாக அனுமதி பெற்றார்.

அதன் பேரில் பாதை திறப்பு விழா நடந்தது. நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். ஆணையாளா் (பொ) ஜெயப்பிரியா, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் பொன்னு லிங்கம், சிமெண்டு ரோட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.


Next Story