புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு


புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
x
தினத்தந்தி 15 March 2023 12:11 AM IST (Updated: 15 March 2023 12:11 AM IST)
t-max-icont-min-icon

துளசாபுரம் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.

நாகப்பட்டினம்

தலைஞாயிறு ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் மகாராஜபுரம் கீழ்பாதியில் ரூ.29 லட்சத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் தலைமை தாங்கி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகா குமார், ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கற்பகம் நீலமேகம், சாந்தி, ரத்தினகுமார், தமிழ்ச்செல்வி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் செல்வராஜ் நன்றி தெரிவித்தார்.


Next Story