நெல்லை கொக்கிரகுளத்தில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு
நெல்லை கொக்கிரகுளத்தில் ரூ.12½ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.
நெல்லை கொக்கிரகுளம் அறிவியல் மையம் முன்பு புதிய பஸ்நிலையம் அமைக்க ஞானதிரவியம் எம்.பி., தனது நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்த்தின் கீழ் ரூ.12½ லட்சம் ஒதுக்கீடு செய்தார். அந்த நிதியை கொண்டு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் புதிய காங்கிரீட் நிழற்குடை, சாய்வுடன் கூடிய இருக்கைகள், அங்கு வந்து செல்லும் பஸ்களின் வழித்தடம் தெரிவிக்கும் 2 டிஜிட்டல் திரைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய பயணிகள் நிழற்குடையை ஞானதிரவியம் எம்.பி. நேற்று பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், மாநகர தி.மு.க. துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், உதவி ஆணையாளர் (பொறுப்பு) வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் லெனின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.