நாசரேத்தில் புதுப்பிக்கப்பட்ட புதிய கால்பந்து ஸ்டேடியம் திறப்பு
நாசரேத்தில் புதுப்பிக்கப்பட்ட புதிய கால்பந்து ஸ்டேடியத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி
நாசரேத்:
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த நிதியில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கால்பந்து ஸ்டேடியத்தை ரூ.7.5 லட்சம் மதிப்பில் கட்டிக் கொடுத்துள்ளார்.
இந்த புதிய ஸ்டேடியத்தை அமைச்சர் திறந்து வைத்தார். பழைய மாணவர் சங்கத் தலைவர் ரூபன்துரைசிங், செயலாளர் ஜட்சன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ரத்தின குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. ஏ.டி.கே.ஜெயசீலன், நெல்லை மாவட்ட கல்பந்துக்கழக முன்னாள் செயலாளர் நோபுள் ராஜன், நகர தி.முக. செயலாளர் ஜமீன்சாலமோன், நகர பஞ்சாயத்து தலைவி நிர்மலாரவி, துணைத் தலைவர் அருண் சாமுவேல், முன்னாள் தலைவர் ரவி செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story