ஊட்டியில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு


ஊட்டியில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை மூடப்பட்டு இருந்தது. தினத்தந்தி செய்தி எதிரொலியாக அந்த அறை திறக்கப்பட்டு உள்ளது.இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை மூடப்பட்டு இருந்தது. தினத்தந்தி செய்தி எதிரொலியாக அந்த அறை திறக்கப்பட்டு உள்ளது.இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

பாலூட்டும் அறை

பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும் போது, பஸ் நிலையங்களில் காத்திருக்க வேண்டி உள்ளது. அப்போது தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி பாலூட்டும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள பஸ் நிலையங்களில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டு இயங்கி வந்தது.

இதேபோல் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையில் இருக்கைகள், மின் விசிறி போன்ற வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் தாய்மார்கள் பலர் பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே அந்த அறை பெரும்பாலான நேரங்களில் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அறையை திறக்குமாறு யாரிடம் கேட்பது என்று தெரியாமல் கிராமப்புற பகுதிகளில் இருந்து குழந்தைகளுடன் வந்த பெண்கள் தயக்கம் அடைந்தனர்.

தாய்மார்களுக்காக திறப்பு

மேலும் தாய்மார்கள் கைக்குழந்தைகளுடன் தவித்து வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கருத்து மற்றும் படத்துடன் கடந்த 10-ந் தேதி தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊட்டி பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. மூடப்பட்டு இருந்த அறை திறக்கப்பட்டு உள்ளதால், பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெண்களின் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்து மீண்டும் அறையை திறந்த அதிகாரிகளுக்கும், பெண்கள் நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தாய்மார்கள் பாலூட்டும் அறை கண்ணாடிகள் வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே யாரும் இருப்பது தெரியாத வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இதை தவறாக பயன்படுத்த நினைக்கும் சமூக விரோதிகள் சிலர், அந்த அறைக்குள் சென்று மது குடிக்கின்றனர். அதற்காக தான் அந்த அறையை பூட்ட வேண்டி இருந்தது. தற்போது தாய்மார்களுக்காக அறை திறக்கப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story