பகுதி நேர ரேஷன் கடை திறப்பு
ஆம்பூர் அருகே பகுதி நேர ரேஷன் கடையை கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்.
திருப்பத்தூர்
ஆம்பூர் அருகே மின்னூர், உடையராஜபாளையம், கம்மகிருஷ்ணப்பள்ளி, சின்னவரிகம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி ரேஷன் கடைகளை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசினார்கள்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாதனூர் ஒன்றியக்குழு துணை தலைவர் சாந்திசீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர் சசிகலா சாந்தகுமார், அரசு துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story