தேனியில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு திறப்பு
தேனியில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு திறக்கப்பட்டது.
தேனி
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கோர்ட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அறிவொளி தலைமை தாங்கி புதிய போக்சோ கோர்ட்டை திறந்து வைத்தார். அப்போது இந்த சிறப்பு கோர்ட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதில், நீதிபதிகள், அரசு அதிகாரிகள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இதையடுத்து சிறப்பு கோர்ட்டின் அமர்வு நீதிபதி கணேசன், அந்த கோர்ட்டில் வழக்கு விசாரணையை தொடங்கினார். இதில், நீதிபதிகள், அரசு அலுவலர்கள், வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story