சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் நிர்வாகத்தில் உள்ள நீலாதேவி - பூதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை சுந்தரராஜ பெருமாள் சயனகோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சுந்தரராஜ பெருமாள், நம்மாழ்வாருக்கு காட்சி கொடுத்தார். அவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ''கோவிந்தா... கோவிந்தா..." என கோஷங்கள் முழங்கி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


Next Story