நகர்புற நல வாழ்வு மையம் திறப்பு
ராஜபாளையத்தில் நகர்புற நல வாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட சம்பந்தபுரம் 8-வது வார்டு மற்றும் மலையடிப்பட்டி 25-வது வார்டு ஆகிய பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. குத்து விளக்கேற்றி வைத்தார். இதில் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story