தருவைகுளத்தில்தண்ணீர் பந்தல் திறப்பு


தருவைகுளத்தில்தண்ணீர் பந்தல் திறப்பு
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தருவைகுளத்தில்தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளத்தில் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பங்குத் தந்தை வின்சென்ட் தலைமை தாங்கி கோடை கால தண்ணீர் மற்றும் மோர் பந்தல் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நற்பணி மன்ற தலைவர் அனிட்டன், செயலாளர் செல்வ சேகர், பொருளாளர் தேவ திரவியம், துணை செயலாளர் நீக்குலாஸ், ஒருங்கிணைப்பாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மன்ற அமைப்பாளர்கள் அசோகன், லாரன்ஸ் செய்து இருந்தனர்.


Next Story