கோட்டைப்பட்டினத்தில் மகளிர் போலீஸ் நிலையம் திறப்பு


கோட்டைப்பட்டினத்தில் மகளிர் போலீஸ் நிலையம் திறப்பு
x

கோட்டைப்பட்டினத்தில் மகளிர் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை

காவல்துறை சார்பாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களை தமிழக முதல்-அமைச்சர் காெணாலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஒன்று தொங்கப்பட்டது. அந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை புதுக்கோட்டை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், கடலோரப் பகுதிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக தமிழக அரசு இந்த பகுதியில் புதிதாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை தொடங்கியுள்ளது. ஆகையால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா, கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் அக்பர் அலி மற்றும் பொதுமக்கள் மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.


Next Story