டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க நடவடிக்கை
பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் தெரிவித்தார்
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் தெரிவித்தார்..
பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஆய்வு
தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தார். அவருடன் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் டாக்டர் செந்தில்குமார், முதுநிலை கோட்ட பாதுகாப்பு அலுவலர் சரவணன் மற்றும் திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் வந்திருந்தனர்.
பின்னர் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் சிக்னல் பிரிவு, எலக்ட்ரிக்கல் பிரிவு, பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் ரெயில் பாதைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தீயணைப்பு சாதனங்கள் முறையாக செயல்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.
மரக்கன்றுகள் நடும் திட்டம்
பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை விதை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கோட்ட ரெயில்வே மேலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையத்தை மீண்டும் இயக்க வேண்டும்.
கம்பன் விரைவு ரெயிலுக்கு பதிலாக தாம்பரம்-ராமேஸ்வரம் தினசரி இரவு நேர விரைவு ரெயில், சோழன் அதிவிரைவு ரெயிலுக்கு மயிலாடுதுறையில் இணைப்பு ரெயிலாக காரைக்குடி- மயிலாடுதுறை ரெயிலை இயக்க வேண்டும்.
டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க நடவடிக்கை
திருவாரூர்-பட்டுக்கோட்டை- காரைக்குடி ரெயில் தடத்தில் இயங்கி வரும் பயணிகள் ரெயிலை ஞாயிற்றுக்கிழமையும் இயக்க வேண்டும்.
அதிராம்பட்டினம் ரெயில் நிலையத்தில் தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயில் நின்று செல்ல வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தினர், தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளரிடம், கோரிக்கை விடுத்தனர்
பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் தெரிவித்தார்.