வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு


வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு
x

வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர்

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 8.11.2011 அன்று பணி இழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கியுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் 8.11.2011 அன்று பணி இழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பித்து பணியில் சேருமாறு ஒன்றியங்களிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொண்டு, தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன், தற்போது வழங்கப்படவுள்ள பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்ப கடிதத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) வருகிற 13-ந் தேதி முதல் 18-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் மட்டுமே இப்பணியிடத்திற்கு பரிசீலிக்கப்படுவர் என்பதால், இவ்வறிவிப்பிற்கேற்ப தவறாமல் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story