உசிலம்பட்டி அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - கிராம மக்களுடன் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

உசிலம்பட்டி அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - கிராம மக்களுடன் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
x

உசிலம்பட்டி அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களுடன் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களுடன் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

முற்றுகை போராட்டம்

உசிலம்பட்டி அருகே கல்லூத்து ஊராட்சிக்கு உட்பட்ட கல்யாணிபட்டி கிராமத்தில் புதிதாக அரசு மதுபான கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுக்கடை அமைய உள்ள பகுதியில் விவசாய நிலங்கள், மகாலிங்கம் கோவில், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உள்ளன.

எனவே இந்த இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க கூடாது என நாம் தமிழர் கட்சியினரும், கிராம மக்களும் கடை அமைய உள்ள இடத்தில் திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு உசிலம்பட்டி அய்யப்பன் எம்.எல்.ஏ., பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட கவுன்சிலர் ரெட்காசி ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த உத்தப்பநாயக்கனூர் போலீசாரும் மதுக்கடை அமைப்பதை தடுப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story