சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு...!


சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு...!
x
தினத்தந்தி 2 Feb 2023 5:33 PM IST (Updated: 2 Feb 2023 5:34 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர்கள் ஜனாதிபதிக்கு மனு அளித்துள்ளனர்.

சென்னை,

பாஜக நிர்வாகியாக இருந்த விக்டோரியா கவுரியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

மேலும், கொலீஜியம் அளித்த பரிந்துரையை திரும்பப் பெறக் கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியத்துக்கும் மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று வழக்குரைஞர் விக்டோரியா கவுரியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க வேண்டாம் என்றும் பரிந்துரையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 21 மூத்த வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.


Next Story