விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில்700 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைஅமைச்சர் பொன்முடி வழங்கினார்
விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில் 700 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஈடில்லா ஆட்சி இரண்டாண்டே சாட்சி என்ற தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனை மலர் வெளியிடும் நிகழ்ச்சி மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு அரசின் 2 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார். தொடர்ந்து, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 700 பேருக்கு ரூ.91 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ராவிஜயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், நகரமன்ற துணைத்தலைவர் சித்திக்அலி, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.