விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு பணி நியமன ஆணை


விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு பணி நியமன ஆணை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி மின்கோட்டத்திற்குட்பட்ட மாதானம் பகுதியில் மின்பணியாளராக (போர்மேன்) பணியாற்றி வந்த ராமசந்திரன் பணிக்கு சென்ற போது வாகன விபத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது மகனுக்கு வாரிசு அடிப்படையில் அரசு பணி வழங்க அவரது குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து முதல்-அமைச்சர், ராமசந்திரன் மகன் ராஜகோபாலை மின்வாரியத்தில் மின்பணி உதவியாளராக நியமனம் செய்து உத்தரவிட்டார். சீர்காழி மின் பகிர்மான அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜகோபாலுக்கு பணி ஆணையை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வழங்கினார். நிகழ்ச்சியில் மேற்பார்வை பொறியாளர் சசிதரன், செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், விஜயபாரதி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story