41 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன


41 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன
x

கீழ்வேளூரில் ஜமாபந்தி நிறைவு, 41 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். தாலுகாவிற்கு உட்பட்ட கீழ்வேளூர், தேவூர், கீழையூர், வேளாங்கண்ணி வருவாய் சரகங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 148 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இதில் 41 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் (பொறுப்பு) துர்காபாய், தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயசெல்வம், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Next Story