மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்


மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர்.

வேலூர்

விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் துர்காபிரசாத் (வயது 14). கடந்த சில நாட்களுக்கு முன்னர் மோட்டார்சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த துர்காபிரசாத் வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், துர்கா பிரசாத்துக்கு நேற்று மூளைச்சாவு ஏற்படவே துர்காபிரசாத்தின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒப்புதல் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து துர்காபிரசாத்தின் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதய வால்வு ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி தானமாக பெறப்பட்டது.

தொடர்ந்து, சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதய வால்வு ஆகியவற்றை பாதுகாப்புடன் சென்னையில் இருந்த வந்த மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்றனர்.


Next Story