விவசாயிகளுக்கு அங்கக வேளாண் பயிற்சி
விவசாயிகளுக்கு அங்கக வேளாண் பயிற்சி
கோத்தகிரி
கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காய்கறி பயிர்களில் அங்கக வேளாண்மை குறித்த பயிற்சி, நெடுகுளா மற்றும் கப்பட்டி கிராமங்களில் நடைபெற்றது. இதற்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை வகித்து தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து பேசினார். துணை தோட்டக்கலை அலுவலர் சந்திரன் அங்கக வேளாண்மையில் இடுபொருட்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். முன்னோடி விவசாயி நடராஜ் இயற்கை வேளாண்மையில் ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தார். பின்னர் விதை தொகுப்பு மற்றும் இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட்டது. முன்னதாக அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் வரவேற்றார் முடிவில் விவசாய குழு செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.