இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
கண்ணமங்கலம் அரசு பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இயற்கை விவசாயியும், முன்னாள் ராணுவ வீரருமான கங்காதரன் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியன், ஜெயக்குமார், இளமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நந்தகுமார் வரவேற்று பேசினார்.
இதில் குடியாத்தம் இயற்கை விவசாயி சிவசங்கரன் கலந்து கொண்டு, வயல்வெளியில் இயற்கை முறையில் பயிருக்கு தேவையான பொருட்கள் வழங்கி அதிக லாபம் பெற தேவையான முயற்சியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் பாரம்பரிய நெல் மற்றும் விதைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story