பொதுமக்கள் பனை விதைகள் வழங்க ஏற்பாடு


பொதுமக்கள் பனை விதைகள் வழங்க ஏற்பாடு
x
தினத்தந்தி 1 Sept 2023 1:00 AM IST (Updated: 1 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் பனை விதைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர்

தமிழக கடலோர பகுதிகளில் 1,076 கி.மீ. தொலைவிற்கு ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. இதில் ஒரு லட்சம் மாணவர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பனை விதைகள் சேகரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் பனைவிதைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேகரிக்கும் பனை விதைகளை பாதுகாப்பாக வைக்க எண்ணூர், நாகை, முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம், மணல்மேல்குடி உள்ளிட்ட இடங்களில் விதை வங்கிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் பனை விதைகளை வழங்கலாம் என சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.


Next Story