அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் வெளியேறிய முன்னாள் எம்.பி. மைத்ரேயன்
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தொலைபேசிக்கு அனுமதி இல்லை என அறிவுறுத்திய நிலையில், முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வெளியேறினார்
சென்னை
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்து உள்ளனர்.
23ம் தேதி இந்த கூட்டம் நடக்க உள்ள நிலையில், அதை குறித்து இன்று ஆலோசனை நடத்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அ.தி.மு.க.வின் அவை தலைவரை தேர்வு செய்யவது, பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள், ஜனாதிபதி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை, அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் வெளியேறினார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன்
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தொலைபேசிக்கு அனுமதி இல்லை என அறிவுறுத்திய நிலையில், முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வெளியேறினார்