ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. பதிலடி

ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. பதிலடி
x

நாகை அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டுள்ள பகுதியில் அ.தி.மு.க.வினருக்கு நிலம் இருப்பதாக நிரூபித்தால் அந்த இடங்களை இலவசமாக எழுதி கொடுக்க தயார் என அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்

பொதுக்கூட்டம்

நாகை நகர அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகை அவுரி திடலில் நடைபெற்றது. விழாவிற்கு நகர செயலாளர் தங்க கதிரவன் தலைமை தாங்கினார். இதில் அமைப்பு செயலாளர் ஆசைமணி, முன்னாள் அமைச்சர்கள் ஜீவானந்தம், ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்த எடப்பாடி பழனிசாமி எப்போது ஆட்சிக்கு வருவார் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

இலவசமாக எழுதி கொடுக்க தயார்

நாகை அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டுள்ள பகுதியில் அ.தி.மு.க. வினருக்கு நிலங்கள் இருப்பதாலேயே, அந்த பகுதியில் கல்லூரி அமைக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வினருக்கு அப்பகுதியில் நிலங்கள் இருப்பதாக அமைச்சர் நிரூபித்தால், ஒரு ரூபாய் கூட வாங்காமல் அந்த இடத்தை இலவசமாக எழுதி தர தயார். இ்வ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story