ஒசூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நரசிங்கபுரத்தில் உள்ள ஓரேம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
சேத்துப்பட்டு
நரசிங்கபுரத்தில் உள்ள ஓரேம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள ஓசூரம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையொட்டி கோவிலில் பஞ்சவர்ணம் பூசி திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேக நாள் குறிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. அதன்படி கோவிலுக்கு முன்பு பெரிய பந்தல் போடப்பட்டு 5 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டது. அதில் புனித நீர் நிரப்பிய 201 கலசங்கள் வைக்கப்பட்டு விக்னேஸ்வரர், மகா கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜை, நவகிரக பூஜை, கோ பூஜை நடத்தப்பட்டு அனைத்து சுவாமிகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து தம்பதி பூஜைகள் நடைபெற்றது பின்னர் புனித நீரை கொண்டு கோவில் கோபுரத்தின் மீது உள்ள விமான கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்து கற்பூர ஆராதனை காட்டி கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மூலவர் சன்னதியில் உள்ள ஓசூரம்மன்நவகிரக சன்னதியில் பூஜை நாக தேவதைக்கு பூஜை செய்யப்பட்டது பின்னர் அலங்காரம் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஓசூரம்மன்வாகனத்தில் வைத்து வீதியுலா வந்தனர் அப்பொழுது பக்தர்கள் தெருக்களில் மாவிலைத் தோரணம் கட்டி தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இரவு நாடகம் நடந்தது நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா ஸ்ரீதர் மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார் சேத்துப்பட்டு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நரசிங்கபுரம் விழாக் குழுவினர். இளைஞர்கள் பொதுமக்கள் செய்து இருந்தனர்.