ஒட்டன்சத்திரம்: அரசு பஸ் மீது பைக் மோதியதில் தீப்பிடித்து எரிந்தது - ஒருவர் உயிரிழப்பு


ஒட்டன்சத்திரம்: அரசு பஸ் மீது பைக் மோதியதில் தீப்பிடித்து எரிந்தது - ஒருவர் உயிரிழப்பு
x

ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

ஒட்டன்சத்திரம்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்று அரசு பஸ் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் அரசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், பஸ் தீப்பிடித்து எரியத் தொடங்கியதும் பஸ்சில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பஸ்சில் இருந்தவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.


Next Story