"எங்கள் நாடு தமிழ்நாடு...இஷ்டம் இருந்தா இரு...இல்ல ஓடு" - சீமான் பரபரப்பு பேட்டி


எங்கள் நாடு தமிழ்நாடு...இஷ்டம் இருந்தா இரு...இல்ல ஓடு -  சீமான் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 7 Jan 2023 3:19 PM IST (Updated: 7 Jan 2023 3:20 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சென்னை,

சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், தமிழக கவர்னர் தமிழ்நாடு எனக் கூறுவதைவிட, தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று பேசியிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான்

கவர்னருக்குசரியாக இருக்கும். சுப்ரமணியசாமி ஐயாவுக்கு சரியாக இருக்கும்.பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்னாடி, திருநெல்வேலியில் கல்வெட்டு இருக்கிறது.எங்கள் நாடு தமிழ்நாடு. இஷ்டம் இருந்தால் இரு, இல்லையென்றால் ஓடு. எனவே தேவையில்லாதவற்றை பேசிக்கொண்டிருக்கக் கூடாது.என தெரிவித்தார்.

மேலும் கவர்னர் ஏதாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு ஒரு வேலையும் இல்லை. நமக்கு கோடி வேலை இருக்கிறது" என்று அவர் கூறினார்.




Related Tags :
Next Story