தூத்துக்குடி மாவட்டத்தில் 120 பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 120 பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் சனிக்கிழமை நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 120 பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
120 கிராமங்கள்
2022-23-ம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 120 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிராம பஞ்சாயத்துகளில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் நடக்கிறது. ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் நாலுமாவடி, புறையூர், கருவேலம்பாடு, உடையார்குளம், மளவராயநத்தம், அழகப்பாபுரம், குரங்கனி, புன்னக்காயல், கருங்குளம் வட்டாரத்தில், வடவல்லநாடு, செக்காரக்குடி, முறப்பநாடு புதுக்கிராமம், கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, ராமானுஜம் புதூர், விட்டிலாபுரம், கோவில்பத்து, தாதன்குளம், ஆழிகுடி, கயத்தாறு வட்டாரத்தில் கே.சுப்பிரமணியபுரம், குப்பணாபுரம், கே.சிவஞானபுரம், தெற்குவண்டானம், திருமலாபுரம், வடக்கு இலந்தைகுளம், கே.வெங்கடேஸ்வரபுரம், பன்னீர்குளம், கே.சிதம்பராபுரம், சிதம்பராபுரம், முடுக்கலான்குளம், சோழபுரம், உசிலங்குளம், வடக்குவண்டானம்,
கோவில்பட்டி
கோவில்பட்டிவட்டாரத்தில் பாண்டவர்மங்கலம், இளம்புவனம், சின்னமலைக்குன்று, கொடுக்காம்பாறை, சிதம்பராபுரம், சிந்தலக்கரை, குலசேகரபுரம், கடலையூர், துறையூர், மூப்பன்பட்டி, தீத்தாம்பட்டி, சத்திரப்பட்டி, ஆர்.வெங்கடேஸ்வரபுரம், வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, ஜமீன்தேவர்குளம், சித்திரம்பட்டி, ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் சில்லாங்குளம், பாஞ்சாலங்குறிச்சி, பசுவந்தனை, கீழமங்கலம், வேடநத்தம், வெள்ளாரம், நாகம்பட்டி, கொல்லங்கிணறு, கொடியங்குளம், கே.தலைவாய்புரம், மலைப்பட்டி, புதூர் பாண்டியாபுரம், கொல்லம்பரும்பு, கொத்தாளி, முறம்பன், குமரெட்டியாபுரம், சங்கம்பட்டி, பாறைக்குட்டம், புதூர் வட்டாரத்தில் வெம்பூர், முத்துலாபுரம், சிவலார்பட்டி, கீழக்கரந்தை, பட்டிதேவன்பட்டி, லட்சுமிபுரம், வீரப்பட்டி, காடல்குடி, மாசார்பட்டி, முத்தையாபுரம், சாத்தான்குளம் வட்டாரத்தில் சாஸ்தாவிநல்லூர், புதுக்குளம், கோமநேரி, பிடாநேரி, பழங்குளம், பெரியதாழை, நெடுங்குளம்,
ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில், ஸ்ரீமூலக்கரை, சிறுதொண்டநல்லூர், சூளைவாய்க்கால், வெ.ஆதிச்சநல்லூர், பேரூர், மஞ்சள்நீர்காயல், உமரிக்காடு, அகரம், தூத்துக்குடி வட்டாரத்தில் குமாரகிரி, வடக்குசிலுக்கன்பட்டி, மேலதட்டப்பாறை, தளவாய்புரம், கீழத்தட்டப்பாறை, தெற்குசிலுக்கன்பட்டி, திருச்செந்தூர் வட்டாரத்தில் பள்ளிப்பத்து, மூலக்கரை, பிச்சிவிளை, வீரமாணிக்கம், உடன்குடி வட்டாரத்தில் வெங்கட்ராமானுஜபுரம், மணப்பாடு, ஆதியாக்குறிச்சி, சீர்காட்சி, சிறுநாடார்குடியிருப்பு, விளாத்திகுளம் வட்டாரத்தில் வேம்பார்தெற்கு, வைப்பார், வேம்பார், கீழவைப்பார், வில்வமரத்துப்பட்டி, வேலிடுபட்டி, ஜமீன்கரிசல்குளம், கே.சுந்தரேஸ்வரபுரம், நீராவிபுதுப்பட்டி, மார்த்தாண்டம்பட்டி, எம்.குமாரசக்கனாபுரம், ராமனூத்து, வீரபாண்டியபுரம், பி.மீனாட்சிபுரம் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.
இந்த சிறப்பு முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டுவிவசாயம் சார்ந்த அனைத்து குறைகளையும் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.