பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்


பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
x

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திண்டுக்கல்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். மேலும் சபரிமலை சீசன் என்பதால் தற்போது ஆந்திரா, கேரளா, கர்நாடகா என வெளிமாநில அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு அதிக அளவில் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் திருஆவினன்குடி, மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதால் பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் மார்கழி மாதம் என்பதால் அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்படுகிறது. இதனால் அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதிகள், பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பக்தர்கள் கூட்டம் காரணமாக ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். இதேபோல் மலைக்கோவிலில் வெளிப்பிரகாரம், தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 3 மணி நேர காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.


Next Story